உத்தரகாண்ட் சுரங்கத்தில் தெரிந்த ஒளி! 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு! அடுத்த நடவடிக்கை இதுதான்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்தை 41 தொழிலாளர்கள் 18 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலச்சரிவு: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

மீட்பு போராட்டம்: கடந்த 18 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருந்தனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 18 நாட்கள் ஆகிவிட்டதால் தீவிர மனசோர்வுக்கு ஆட்பட்டிருந்தார்கள். எனவே மீட்பு பணியை துரிதப்படுத்தி அவர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தது.
சிக்கல்: ஆனால் இதில் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.
புதிய முயற்சி: எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்த துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடினர். இந்த முயற்சி வெற்றியடைந்தது. தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை: இப்படி இருக்கையில் மீட்பு பணி முடிந்த பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதாவது தொழிலாளர்களுக்காக, சின்யாலிசூரில் உள்ள சுகாதார மையத்தில் 41 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கிறது. மருத்துவமனைக்கு தடையின்றி செல்ல போக்குவரத்து முழுமையாக சீர் செய்யப்பட்டிருந்தது. அந்த பாதையில் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை அடைந்துள்ளன.
மனநல பிரச்னைகள்: தொழிலாளர்கள் காயமின்றி வெளியே வந்தாலும் கூட அவர்களுக்கு மன உளைச்சல், அதிக பதட்டம், தொடர்ச்சியான கவலை, அமைதியின்மை, பீதி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினாலும் கூட தூங்குவதில் சிரமம், இரவில் அடிக்கடி எழுந்திருத்தல், பயங்கர கனவுகள் போன்ற சிக்கல்களும் உருவாகலாம். மேலும் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் குறைபாடுகள், முடிவெடுக்கும் திறன், யதார்த்தத்தை நம்பாமல் இருப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே இவை அனைத்திற்கும் தற்போது முன்னெச்சரிக்கையாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தணிக்கை: இந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் தற்போது கட்டப்பட்டு வரும் 29 சுரங்க பாதைகளை தணிக்கை செயும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications