ஹோமோ செக்ஸ் இன்போஃசிஸ் ஊழியரை, ரகசியமாக படம் பிடித்து மாட்டி விட்ட மனைவி
பெங்களூர்: கணவரின் ஓரினச் சேர்க்கை விவகாரத்தை ரகசிய கேமராவில் படம்பிடித்து அவரை போலீசில் சிக்க வைத்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த பல் டாக்டர்.
பெங்களூரில் வசிக்கும் 32 வயது இன்ஜினியர் ஜான்சன். இன்போசிஸ் நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி எலிசபெத் (தம்பதிகள் பெயர் மாற்றப்பட்டுள்ளது). எலிசபெத் பெங்களூரில் பல் டாக்டராக பணியாற்றுகிறார். திருவனந்தபுரத்தில் பிறந்து அபுதாபியில் வளர்ந்தவரான ஜான்சனுக்கும், எலிசபெத்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

ஆரம்பம் முதலே எலிசபெத் மீது, ஜான்சன் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். கடந்த மே மாதம் முதல் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தனர். ஜான்சனின் நடவடிக்கைகள் எலிசபெத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஜான்சன் லிப்ஸ்டிக்கை தினந்தோறும் உதட்டில் பூசுவதையும், பெண்கள் அணியும் பேண்டீ போன்ற ஜட்டியை பயன்படுத்துவதையும் எலிசபெத் கவனித்துள்ளார்.
அவரது குணங்கள், நடவடிக்கைகள் பெண்மை தன்மையுடையதாகவே இருந்துள்ளது. மேலும், எலிசபெத்துடன் உறவு கொள்ளாமல் ஜான்சன் தனி அறையில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், மனநல மருத்துவரை பார்க்கவும் எலிசபெத் தனது கணவனுக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆனால் அதை மறுத்துவிட்டாராம் ஜான்சன். மாமியார், மாமனாரிடம் சொன்னபோது, தேவைப்பட்டால் விவாகரத்து செய்துவிட்டு போய்விடு என்று மருமகளிடம் எரிந்து விழுந்துள்ளனர்.
காலை 8 மணிக்கு அலுவலகத்துக்கு செல்லும் ஜான்சன் இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்புவாராம். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களிடம் தனது கணவரின் நடவடிக்கைகளை எலிசபெத் விசாரித்துள்ளார். எலிசபெத் வீட்டில் இல்லாத நேரத்தில் சில ஆண்களை ஜான்சன் அழைத்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி கேட்டால், பிஸினஸ் சம்பந்தமாக ஆலோசிக்க நண்பர்கள் சிலர் வந்ததாக ஜான்சன் கூறியுள்ளார்.
கணவர் மீதான சந்தேகம் வலுக்கவே வீட்டின் ஹால், படுக்கை அறை ஆகியவற்றில் ரகசிய கேமராக்களை வைத்து கண்காணிக்கும் நடவடிக்கையில் எலிசபெத் இறங்கினார். கடந்த 1ம் தேதி அன்று ஒருவார விடுமுறையில் தனது தாய் வீட்டுக்கு செல்வதற்காக தும்கூர் புறப்பட்டு சென்றார் எலிசபெத். ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய எலிசபெத் ரகசிய கேமராக்களில் பதிவானதை பார்வையிட்டார்.
அப்போது மற்றொரு ஆணுடன் தனது கணவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு திடுக்கிட்டார். அதை சி.டி.யில் பதிவு செய்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஜான்சன் மீது எலிசபெத் புகார் அளித்தார். ஜான்சன் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை தெரிந்தும் தனது மாமியார், மாமனார் அவருக்கு திருமணம் செய்து வைத்து தன்னை மோசடி செய்துவிட்டாக கூறியிருந்தார். இந்திய சட்டப்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்பதால், ஜான்சன் மீது ஐ.பி.சி 377வது பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரது பெற்றோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications