"கவர்ச்சி" மனைவி.. பகலில் கதவை தாழ்ப்பாள் போட்டு.. "வீடியோ"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன ஜட்ஜ்
கணவனை மனைவி தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது
ஜெய்ப்பூர்: இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சயரிப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது..!
பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.. மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர்.
சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன.

சுவாரஸ்யம்
அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு சம்பவம் அனைவரின் சுவாரஸ்யத்தையும் ஈர்த்து வருகிறது.. அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி, ஆச்சரியமும், சிரிப்பும், கவலையுமாக தொற்றிக் கொண்டுள்ளது.. அல்வார் மாவட்டத்தில் உள்ளது பிவாடி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் அஜித் சிங் யாதவ்... இவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்.. அதுவும் அரசு பொது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர்..

கவர்ச்சி பெண்
இவர் ஒரு பெண்ணை காதலித்தார்.. அந்த பெண் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர்.. பெயர் சுமன் என்பதாகும்.. அந்த பெண் மிகவும் அழகாக, கவர்ச்சியாக இருப்பாராம்.. ஆசை ஆசையாக விரும்பி கல்யாணமும் செய்து கொண்டார்.. ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது.. ஆனால் நாளுக்கு நாள் அந்த அழகு பெண்ணின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.. ரொம்ப கோவம் வருமாம்.. ரொம்ப டென்ஷன் ஆவாராம்..

சண்டை
சண்டை என்று வந்துவிட்டால் போதும், அந்த வீடே இரண்டாகிவிடுமாம்.. அதுமட்டுமல்ல, எப்போது சண்டை வந்தாலும், அந்த வீட்டு கதவை அந்த பெண் சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிடுவாராம்.. வீட்டிற்குள்ளிருந்து "டம்.. டம்.."ன்னு சத்தம் மட்டும் வெளியே கேட்குமாம்.. பிறகுதான் தெரிந்தது, சப்பாத்தி கட்டையால், கணவனை போட்டு தாக்கும் சத்தமாம் அது.. பிறகு கணவனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதுவாராம்.. கையில் என்ன கிடைக்கிறதோ, அவை அத்தனையையும் ஹெட்மாஸ்டர் அஜித் மீதுதான் வீசுவாராம்.

டயர்ட்
கையில் எதுவுமே கிடைக்காவிட்டால், மனைவியே எட்டி எட்டி உதைப்பாராம்.. மனைவியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவிடவும், அஜித் மிகவும் டயர்டாகிவிட்டார்.. அதற்கு மேல் அடிவாங்க உடம்பில் தெம்பு இல்லாமல் நேராக போலீசுக்கு ஓடிவிட்டார்.. மனைவி என்னை சித்ரவதை செய்கிறார், என்னால் தினமும் அடிவாங்க முடியவில்லை.. என்று குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார்.

ஹெட் மாஸ்டர்
ஆனால் போலீசாரோ, அஜித்குமாரின் புகாரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. ஒரு ஹெட்மாஸ்டரை, ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த பெண் அடித்து தாக்குவாரா? என்று நினைத்தனர்.. ஆனாலும், அஜித் விடவேயில்லை.. தொடர்ந்து போலீசில் புகார் தந்து கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில் சலிப்படைந்துபோன அஜித், போலீசை நம்புவதைவிட பேசாமல் கோர்ட்டுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்தார்..

ஆதாரங்கள்
ஆனால், கோர்ட்டில் ஆதாரங்கள்தானே பேசும்? நமக்கு ஆதரவாக குடும்பத்தில் யாரும் சொல்ல போவதில்லை, அதனால் தகுந்த ஆதாரங்களை நாமளே கோர்ட்டில் காட்டிவிடலாம் என்று யோசித்து, ஆதாரங்களை திரட்ட ஆரம்பித்தார். மனைவி தன்னை தாக்குவதுதான் ஒரே முக்கிய ஆதாரம்.. ஆனால் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அடிப்பதால், வெளியே யாருக்கும் இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்பதால், வீட்டிற்குள்ளேயே மனைவிக்கு தெரியாமல் ரகசிய கேமராக்களை பொருத்தினார் அஜித்..

அஜித் பாவம்
வழக்கம்போல மனைவி, சம்பவத்தன்று "கோவை சரளா"வாக காட்சி தந்தார்.. வழக்கம்போல், ஹெட்மாஸ்டரை புரட்டி எடுக்கவும் துவங்கினார்.. ஒருவழியாக துவைத்து எடுத்த மேட்டர் முடிந்துவிட்டது.. இறுதியில், சிசிடிவி கேமராவை ஓடிப்போய் பார்த்தார் அஜித். அதில் தன்னை மனைவி, வெளுத்திருந்தது பக்காவாக பதிவாகி இருந்தது. இந்த ஆதாரத்தை எடுத்துக் கொணடு கோர்ட்டுக்கு போனார்.. நீதிபதியிடம் வீடியோவை காட்டினார்..

ஜட்ஜ் அதிரடி
அந்த வீடியோ காட்சிகளை பார்க்க, பார்க்க ஜட்ஜ் அரண்டு போய் விட்டார்.. நீதிமன்றமே அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தது... இதுதொடர்பாக தீர விசாரித்து இருதரப்பு சாட்சிகளையும் ஜட்ஜ் கேட்டார்.. இறுதியில், மனைவியால் தாக்குதலுக்குள்ளாகி தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகும் அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.. இந்த சிசிடிவி காட்சிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஆனால், சிசிடிவி மட்டும் இல்லேன்னா, நம்ம அஜித்தின் உயிர் ஊசலாட்டம்தான் போல?!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications