For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 ஸ்டார் ஹோட்டல்களில் இனி பாத்டப்புகள் இருக்காதாம்: ஏன் தெரியுமா?

5 ஸ்டார் ஹோட்டல்களில் இனி பாத்டப்புகள் இருக்காது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒய்ட்னி ஹூஸ்டனும், ஸ்ரீதேவியும்- வீடியோ

    மும்பை: 5 நட்சத்திர ஹோட்டல்களில் இனி பாத்டப்புகள் இருக்காது என்ற தகவல்கள் வந்துள்ளன. இது முற்றிலும் தண்ணீர் சிக்கனத்தை நடைமுறைப்படுத்துவதற்காக என ஹோட்டல் நிர்வாகங்கள் தெரிவித்தன.

    5 ஸ்டார் ஹோட்டல்களில் பாத்டப்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. தற்போது அந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அது கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

    ஷவரில் குளிப்பது

    ஷவரில் குளிப்பது

    இதையடுத்து பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பாத் டப்களை அகற்றுவது என நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். தாஜ், ஓபராய் மற்றும் ஐடிசி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் பயணிகள் பாத்டப்புகளில் நீண்ட நேரம் நிதானமாக குளிப்பதை காட்டிலும் ஷவரில் விரைந்து குளிப்பதையே விரும்புகின்றனர்.

    புதுமை

    புதுமை

    கண்ணாடி அறை போன்ற shower cubicles என்பதே தற்போது மும்பை ஹோட்டல்களில் டிரென்டாகிவிட்டது. பாத் டப்களை அகற்றுவதால் பாத்ரூமில் இடம் மிச்சமாகும். மேலும் பாத்ரூமை புதுமையாக புதுப்பிக்கவும் வசதியாக இருக்கும்.

    செடி வளர்க்கும் தொட்டி

    செடி வளர்க்கும் தொட்டி

    பாத்ரூமில் மசாஜ் செய்யும் கருவி, நீராவி குளியல், வண்ணமயமான விளக்குகள் ஆகியவற்றையும் சில ஹோட்டல்கள் பொருத்தி வருகின்றன. சில ஹோட்டல்கள் பாத்டப்களை செடி வளர்க்கும் தொட்டிகளாக மாற்றிவிட்டன.

    தண்ணீர் பயன்பாடு

    தண்ணீர் பயன்பாடு

    பாத்டப்களை நீக்குவதற்கான காரணம் இவை மட்டுமல்ல. பாத்டப்பில் குளிக்கும் போது 370 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கண்ணாடி ஷவரில் குளிக்கும் போது 70 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படும் என்பதும் ஒரு காரணமாகும்.

    English summary
    5 Star Hotels are going to be missing Bath tubs. As the administration going to change Shower cubicle options.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X