இது மிகவும் தவறு விஷயம்.. மம்தா தாக்கப்பட்டதற்கு பின் சதியா?.. கிடுக்கும்படி போட்ட தேர்தல் ஆணையம்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வகையில் உடந்தையாக செயல்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் வைத்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதிலடி கொடுத்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா அரசியலை இந்த சம்பவ உலுக்கி உள்ளது. நேற்று முதல்நாள் பிருளியா பஜார் அருகே மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்த போது அவர் தாக்கப்பட்டார்.
தனது காருக்கு அருகே நின்று மமதா பானர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நான்கு மர்ம நபர்களால் இவர் தாக்கப்பட்டார். காலில் காயம் அடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல்
எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு மமதா பானர்ஜி அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். இவரை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இவருக்கு காலில் சதை கிழிந்து உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தாக்குதலால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

கோபம்
இந்த நிலையில் மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வகையில் உடந்தையாக செயல்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் வைத்துள்ளது. மேற்கு வங்க தேர்தல் ஆணையம் கடந்த வாரம் கொல்கத்தாவின் டிஜிபியை மாற்றியது. பல போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

பாதுகாப்பு
இதன் காரணமாகவே மம்தாவிற்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது. மம்தாவிற்கு திட்டமிட்டு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று திரிணாமுல் புகார் வைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் உத்தரவிற்கு பணிந்து, பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மமதா தரப்பு புகார்களை அடுக்கி வருகிறது.

பதிலடி
இதற்கு தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், தேர்தல் ஆணையம் மீதி திரிணாமுல் காங்கிரஸ் தவறான புகார்களை வைக்கிறது.முறையற்ற புகார்களை தேர்தல் ஆணையம் மீது மமதா தரப்பு வைக்கிறது. தேர்தலின் போது எப்போதும் செயய கூடிய பணிகளைத்தான் இப்போதும் செய்கிறோம்.

புகார்
எல்லா மாநிலங்களிலும் எப்படி செயல்படுவோமோ அப்படித்தான் செயல்படுகிறோம். மேற்கு வங்கத்தில் புதிய விதி எதையும் நாங்கள் புகுத்தவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தேர்தல் விதிகளுக்கு எதிராகவே திரிணாமுல் காங்கிரஸ் பேச கூடாது . தேர்தல் ஆணையம் தனது பணியைத்தான் செய்கிறது, என்று தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications