டிவி நிகழ்ச்சியின் தாக்கம்.. நண்பனை 22 முறை கல்லால் அடித்து கொன்ற டெல்லி சிறுவன்!
தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து அதேமாதிரி தனது சக தோழனை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற கொடூர நிகழ்வு டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஜெயித்பூரில் 17-வயதுடைய சிறுவன் ஒருவர் தனது இளம் தோழனை தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் கவரப்பட்டு அதேபோன்று கல்லால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் அந்த நபர் 16-வயதுடைய சக தோழனை 22 தடவை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு அவனது உடலை யமுனை நதிக்கரையின் அருகில் உள்ள குட்டையில் வீசி இருக்கிறார். பின்னர் டெல்லி சீறார் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, அதனால் ஈர்க்கப்பட்டு இந்தக் கொடூர கொலையை செய்ததாக அந்த இளம் குற்றவாளி தெரிவித்துள்ளார்.
விருந்து அளிப்பதாக கூறி அவனது நண்பனை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற குற்றம் புரிந்த அந்த இளைஞர், கொஞ்சம் மது அருந்திவிட்டு மேஜிக் செய்வதாகக் கூறி தனது நண்பனிடம் முகத்தை முடி படுத்துக் கொள்ளுமாறு பணித்துள்ளார்.
விபரீதம் நடக்கப்போகிறது என்பதை அறியாத அந்த இளம் தோழனும் நண்பன் கூறியவாறுமுகத்தை முடி தரையில் படுத்துள்ளார். அப்போது தான் திட்டமிட்டபடி தனது இளம் தோழனை தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் நடந்தது போல 22 தடவை கல்லால் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளார். அதன்பின்னர் யமுனை நதிக்கரைக்கு அருகில் உள்ள குட்டையில் உடலை வீசி இருக்கிறார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம் சிறுவனின் பெற்றோர் ஜெயித்பூர் காவல் நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளனர். அப்போது, அந்த பெற்றோருடன் இணைந்து இளம் தோழனை தேடுவது போன்று குற்றவாளியான அந்த இளைஞன் நாடகம் ஆடியுள்ளான். இப்பிரச்னை, பெரிது ஆனதால் சீறார் நீதிமன்றத்தில் சென்று அந்த இளைஞர் சரண் அடைந்துள்ளார்.
அதன்பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த நபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் கொல்லப்பட்ட இளம் தோழன், அந்த இளைஞரை நண்பர்கள் முன்னிலையில் அவமானம் படுத்தியதாகவும் அதனால் அவரை அழைத்துச் சென்று கொன்றதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவலை டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications