காஷ்மீர் அமர்நாத் யாத்திரை- சீர்குலைக்க தீவிரவாதிகள் ஏவும் Sticy Bomb- பாதுகாப்பு படையினர் உஷார்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் Sticy Bomb-களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. மொத்தம் 43 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடைபெறும். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பர். நடப்பாண்டில் வரும் 30-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் யாத்ரீகர்கள் பின்பற்ற வேண்டியவை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

டிரோன்கள் ஊடுருவல்
இதனிடையே அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் முயற்சிகளை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்திரை பாதை அருகே பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்பட்ட வெடிபொருட்களுடனான டிரோன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த வெடிபொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அமர்நாத் யாத்திரை காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அப்பாவி யாத்ரீகர்களை இலக்கு வைக்கக் கூடும் என்கிற அச்சமும் நிலவுகிறது.

தீவிரவாதிகளின் Sticy Bomb
இந்த நிலையில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க Sticy Bomb வகைகளை இந்த முறை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் வாகனங்களில் Sticy Bomb வகைகளை எளிதாகப் பொருத்தி ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்ய முடியுமாம். இத்தகைய Sticy Bomb வகைகளை இம்முறை தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் ராணுவம்
இந்த Sticy Bomb வகைகள், 2-ம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பயன்படுத்தபட்டது. ஈராக், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் இதனை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி இருந்தனர். இந்தியாவில் 2012-ம் ஆண்டு ஈரான் தீவிரவாதிகள் இத்தகைய Sticy Bomb களை பயன்படுத்தி இஸ்ரேல் தூதரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தூதரின் மனைவி படுகாயமடைந்திருந்தார்.

ஜம்மு காஷ்மீரில்..
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதம்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த sticky bomb மூலமாக தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிககியில் தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த sticky bombகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications