சிவராத்திரி அன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
பஞ்சாப்: வருகிற 7 ஆம் தேதி சிவாராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பதன்கோட் உள்ளிட்ட ராணுவத் தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற 7 ஆம் தேதி நாடு முழுவதும் சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பதன்கோட் உள்ளிட்ட விமான படை தளங்கள் உள்ளிட்ட இடங்களில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது என பதன்கோட் மேற்கு பிராந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் வேளையில் அச்சுறுத்தலை ஏற்படுத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் காச்சென் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தளத்தின் அதிமுக்கிய பகுதிகளை ஒருவர் தனது செல்போனில் நேற்று இரவு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராணுவத்தினர் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பூஜ் அருகே உள்ள நானா தினரா கிராமத்தைச் சேர்ந்த ஆயுப் கான் என்பதும், ராணுவத்தின் முக்கிய தளங்களை உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ராணுவ பகுதிகளின் புகைப்படங்கள் அடங்கிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயுப் கான் மீது வழக்குப்பதிவு செய்த ராணுவ போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications