மத மாற்றம் இல்லாமல் நடக்கும் கலப்பு திருமணங்கள் "சட்ட விரோதம்" தான்! அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
அலகாபாத்: காதல் திருமணம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது மதமாற்றம் இல்லாமல் நடைபெறும் கலப்புத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என்று அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஆர்ய சமாஜ் கோவிலில் சிறுமியைக் கடத்தி திருமணம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த போது ஐகோர்ட் நீதிபதிகள் இந்த கருத்துகளைத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனு என்கிற சஹனூர் என்பவர் தனக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தான் ஒரு ஆர்ய சமாஜ் கோவிலில் ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும், அந்த பெண் இப்போது 18 வயதைக் கடந்துவிட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக அவர் கூறியிருந்தார்.

அலகாபாத் ஐகோர்ட்
இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பிரசாந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், மைனர் சிறுமி திருமணத்திற்கு ஆர்ய சமாஜ் கோயில் திருமண சான்றிதழை வழங்கி இருப்பது சட்ட விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைக் குறிப்பிட்டே சிறுமியைக் கடத்தி கோவிலில் திருமணம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆர்ய சமாஜ் கோவில்கள் போன்றவை உரியச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், கட்டணம் பெற்றுக் கொண்டு திருமணச் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன. இது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
மேலும், உத்தரப்பிரதேச உள்துறை செயலாளர் இது குறித்து விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். டிசிபி பதவியில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆர்ய சமாஜ் நிறுவனங்கள், மைனர் ஜோடிகள் அல்லது மதம் மாறாத கலப்புத் திருமண ஜோடிகளுக்கு திருமணச் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக்கில், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிச்லௌல் காவல் நிலையத்தில் தனக்கு எதிராகக் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியிருந்தார். இது தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆர்ய சமாஜ் கோவிலில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இப்போது அவர் 18 வயதைக் கடந்த மேஜர் என்றும் மனுதாரர் வாதிட்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதால் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். மனுவை எதிர்த்து வாதிட்ட உபி அரசு வழக்கறிஞர், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மதம் மாறவில்லை என்றும் தெரிவித்தது. எனவே, இந்த திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்றும் கூறியது. இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
நீதிமன்றம் கருத்து
மேலும், பல ஆர்ய சமாஜ் நிறுவனங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், சிறுவர்கள் அல்லது கலப்புத் திருமண ஜோடிகளுக்கு திருமணச் சான்றிதழ்களை வழங்கி வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இது போன்ற நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆர்ய சமாஜ் திருமணம்
ஆர்ய சமாஜ் திருமணம் என்பது ஆர்ய சமாஜ் கொள்கைகளின்படி நடத்தப்படும் இந்து திருமணமாகும். எளிய முறையில் நடத்தப்படும் இந்த திருமணம் வேத சடங்குகளை ஊக்குவிக்கிறது. இதில் ஆடம்பரம் தவிர்க்கப்பட்டு, அக்னி மற்றும் வேத மந்திரங்கள் ஓதுதல் போன்ற முக்கிய வேத சடங்குகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இது பொதுவாக ஆர்ய சமாஜ் கோவிலில் நடத்தப்படுகிறது. விரைவாகவும் குறைந்த செலவும் ஆவதால் பலர் இந்த முறையில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள்.
அதேநேரம் இந்து திருமண சட்டப்படி மணமகனுக்கு 21 வயது மற்றும் மணமகளுக்கு 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் இந்துவாக இருக்க வேண்டும் அல்லது இந்து மதத்திற்கு மாற வேண்டும். பிற மதங்களை (முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர்) சேர்ந்தவர்கள், இந்து மதத்திற்கு மாறிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.
சட்டவிரோதமானவை
அதேநேரம் கடந்த காலங்களில் பல முறை ஆர்ய சமாஜ் வழங்கும் திருமண சான்றிதழ்களை சட்டப்பூர்வ திருமண சான்றிதழாகக் கருத முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், அலகாபாத் உயர் நீதிமன்றம், ஆர்ய சமாஜ் கோவில்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் திருமணச் சான்றிதழ்களை வழங்குவது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இப்போது மீண்டும் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதில், மதமாற்றம் இல்லாமல் நடைபெறும் கலப்புத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications