Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5-வது சர்வதேச யோகா தினம்.. ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Yoga Day 2019: PM Modi: 5-வது சர்வதேச யோகா தினம், பிரதமர் மோடி பங்கேற்பு- வீடியோ

    ராஞ்சி: 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வெளிநாடு வாழ் இந்தியர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர்.

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 5-வது சர்வதேச யோகா தினம்.

    International Yoga Day: Modi leads celebrations in Ranchi

    இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநில் ராஞ்சியின் பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா ஆசனங்களை செய்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன் சர்வதேச அளவில் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கு நன்றியும் தெரிவித்தார்.

    சிக்கிம் மாநிலத்தில் 19,000 அடி உயரத்தில் டோர்ஜிலா பகுதியில் மைனஸ் 15 டிகிரி செல்சியல் உறைபனியில் இந்தோ திபெத் எல்லை போலீசார் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆசானங்களை செய்தனர். இதேபோல் இமாச்சல் பிரதேசத்தில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் உறைபணியில் இந்தோ திபெத் எல்லை போலீசார் யோகாசனங்களை செய்தனர். ரோடங் கணவாய் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேபாளத்தில் ஜானக்பூர் ஜானகி கோவில் வளாகத்தில் இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பங்கேற்று சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.

    அருணாசல பிரதேசத்தில் இந்தோ திபெத் எல்லை போலீசாரின் 9-வது பட்டாலியன் வீரர்கள் திகாரு ஆற்றில் இறங்கி யோகாசனங்களை செய்தனர். இதேபோல் தமிழகத்தின் பல இடங்களிலும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+