857 ஆபாச இணையதளங்கள் ஒரே நாளில் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
டெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச வெப்சைட்டுகள் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில், ஆபாச வெப்சைட்டுகளை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது.

நீதிமன்றம் தடுக்க முடியாது
இந்த மனு மீது சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, "நான்கு சுவற்றுக்குள் ஒரு தனிநபர் ஆபாச வெப்சைட்டுகளை பார்ப்பதை, சுப்ரீம் கோர்ட் தடுக்க முடியாது. இது எனது அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று அந்த நபர் கோர்ட்டில் முறையிட்டால் என்ன செய்வது" என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு வேண்டுமானால் எடுக்கலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

மத்திய அரசு தலையீடு
இருப்பினும், கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரபலமாக உள்ள சுமார் 857 ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வோடபோன், பிஎஸ்என்எல்
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79ன் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வோடபோன், எம்டிஎன்எல், ஆக்ட், ஹாத்வே மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இணையதள சேவை வழங்கு நிறுவனங்கள், உடனடியாக 857 ஆபாச வெப்சைட்டுகளையும் தடை செய்துவிட்டன.

ஒரே நாளில் மூடிட்டீங்களே
கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சனிக்கிழமை இரவு நான் பார்த்தபோது, ஓபன் ஆன இணையதளங்கள், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஓபன் ஆகவில்லை. பிளாங்காக உள்ளன" என்று தெரிவித்தார். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து எழுந்து வருகிறது.

இந்தியர்கள் இதில் வீக்
முன்னணி ஆபாச இணையதளமான 'போர்ன்ஹப்' வெப்சைட்டை உலகளாவிய அளவில், 14.2 பில்லியன் பேர் விசிட் செய்கிறார்கள். அந்த வாடிக்கையாளர்களில், 40 சதவீதத்தினர் இந்தியர்கள்தானாம். இந்தியாவில், மிசோராம் மாநிலத்தில்தான் இந்த வெப்சைட்டை பார்ப்போர் அதிகமுள்ளனர், 2வது இடத்தில் டெல்லி உள்ளது.

சன்னி லியோனுக்கு டிமாண்ட்
கனடா-இந்திய நாட்டு ஆபாச நடிகையயான சன்னி லியோனைத்தான் அதிகம்பேர் போர்ன்ஹப் வெப்சைட்டில் தேடுகிறார்களாம். கூகுளிலும் அதிகம் தேடப்பட்ட நடிகையாக கடந்த ஆண்டு சன்னி லியோன் தேர்வாகியிருந்த நிலையில், ஆபாச வெப்சைட்டும் அதையே கூறுகிறது.

விமர்சனங்கள்
இதனிடையே, ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது தனி நபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் ஆதங்கம் தெரிவித்துவரும் நிலையில், அரசு சிறந்த முடிவை எடுத்துள்ளதாக மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அரசியல் சாசனத்தின் ஆர்டிக்கிள் 21ன்கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் இவ்வாறு நடப்பதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்த்து பலர் சோஷியல் மீடியாக்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications