அவர் எப்படி அப்படி பேசலாம்?: நடிகர் ஆமீர் கான் மீது இயக்குனர் போலீசில் புகார்
மும்பை: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றி பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மீது இயக்குனர் உல்லாஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆமீரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமை அதிகரித்து வருவதை பார்த்த என் மனைவி கிரண் ராவ் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று கூறினார் என்றார்.

ஆமீரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் குறும்பட இயக்குனர் உல்லாஸ் ஆமீர் கான் மீது செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து உல்லாஸ் கூறுகையில்,
நமக்கு என சில அடிப்படை கடமைகள் உள்ளன. அதில் ஒன்று நாட்டில் நல்லிணக்கத்தை காப்பது ஆகும். அப்படி இருக்கையில் பிரபலங்கள் இது போன்று கூறலாமா? அவர்கள் முதலில் எந்த சமூகத்தை பற்றி பேசுகிறார்கள், எங்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை கூற வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஆமீர் கானை கண்டித்து அவரது வீட்டுக்கு வெளியே பலரும் போராட்டம் நடத்துவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications