ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க செப். 28 வரை தடை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதிவரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்கு சிதம்பரம், டெல்லி ஹைகோர்ட்டை அணுகினார். மே 31ம் தேதி விசாரணை நடைபெற்றபோது, சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 1ம் தேதிவரை தடை விதித்தது டெல்லி ஹைகோர்ட். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டது. அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இன்றைய வாதத்தின் போது மூத்த வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், பிரமோத் குமார் துபே, ரமேஷ் குப்தா மற்றும் மோகித் மாதூர் ஆகியோர் சிதம்பரத்திற்காக ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி ஏ.கே.பதக், அமலாக்கத்துறை தனது பதிலை நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications