பவர் பிளேவை பக்காவாக பயன்படுத்திய சென்னை.. ரஷித் கான் டார்கெட்.. சிஎஸ்கே வென்றது இப்படித்தான்
அகமதாபாத்: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியை ருசித்தது. சென்னை வெற்றிக்கான முக்கிய 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார். சகார் மட்டும் இல்லை..ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார்.
இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது. அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். 7 வது ஓவரை ஜடேஜா வீசினார். இதில் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி கில்லை ஆட்டமிழக்க செய்தார்.
20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர். தீபக் சஹார் கேட் மிஸ் செய்ததால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் கில் ஆட்டமிழந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஏனென்றல் சஹா ஒருபக்கம் அதிரடி காட்ட சாய் சுதர்சன் களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச குஜராத் அணியின் ரன் வேகம் குறையாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சென்னை அணி 215 என்ற இமாலய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் வெறும் 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், சுமார் இரண்டு மணி நேரம் தாமதாக போட்டி மீண்டும் துவங்கியது.
15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. வெற்றி இலக்கும் 171 ஆக குறைந்துள்ளது. அதுபோக பவர் பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஒரு பந்து வீச்சாளர் அதிபட்சமாக 3 ஓவர்கள் மட்டுமே என்றும் விதி மற்றியமைக்கப்பட்டது. சென்னை அணியில் ருதுரஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே பட்டாசு போல வெடித்தனர். அதிரடியாக இந்த ஜோடி விளையாடி சென்னை அணிக்கு நம்பிக்க்கை கொடுத்தது. ஒருபக்கம் ரன்கள் வந்தாலும் விக்கெட்டுகளும் விழுந்தபடியே இருந்தது. போதாக்குறைக்கு தோனியும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்ப்பட்டது. மோஹித் சர்மா கடைசி ஓவரை வீசினார். ஷிவம் துபே எதிர்கொண்டார். முதல் பந்த் டாட் பால் ஆனது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் வந்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு ஜடேஜா அழைத்து சென்றார். இதன் மூலம் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 5-வது முறையக சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை வெற்றிக்கு 5 காரணங்கள்:
* சென்னை அணியை பொறுத்தவரை மழை பெய்ததும் ஒரு விதத்தில் கூட சாதகமாவே மாறிவிட்டது. * ஏனெனில் 214 என்ற டார்கெட் 171 ஆக குறைந்தது. இதுவும் சவாலான இலக்கு என்றாலும் 10 விக்கெட்டுகள் கைவசம் வைத்துக் கொண்டு ரன்கள் இலக்கு குறைந்தது ஒரு சாதகமாவே பார்க்கப்படுகிறது.
* அதுபோக பவர் பிளேவை சென்னை அணி கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. பவர் பிளேவில் 52 ரன்கள் எடுத்ததோடு விக்கெட் எதையும் இழக்கவில்லை.
* கான்வே சரவெடியாக வெடித்தது சென்னைக்கு முக்கிய பலமாக பார்க்கப்பட்டது. ஏனெனில துவக்கத்திலேயே ரன் ரேட்டை கணிசமாக உயத்தி விட்டு சென்றார்.
* இறுதி கட்டத்தில் டோனி ஏமாற்றினாலும் ரகானே, துபே ஓரளவு கணிசமான பங்களிப்பை கொடுத்து ரன் ரேட் சரியாமல் பார்த்துக் கொண்டனர்.
* குறிப்பாக ஜடேஜா கடைசி ஓவரில் டென்ஷன் எதுவும் இன்றி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சரை முதலில் பறக்கவிட்டார். அடுத்தததாக பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications