For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுக்கு சம்மட்டி அடி! குஜராத்தில் வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி.. பாஜகவிற்கு "மறைமுக" உதவி

Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத்தில் கடந்த 2017 தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை சந்தித்த காங்கிரஸ்.. இந்த முறை வரலாறு காணாத தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 30 தொகுதிகளில் கூட அந்த கட்சி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் வந்துள்ளது .

குஜாரத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. முதல்கட்ட நிலவரங்களின்படி பாஜக 150 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பதை தபால் மற்றும் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. அக்கவுண்டை ஓபன் செய்யாத ஆம் ஆத்மி குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. அக்கவுண்டை ஓபன் செய்யாத ஆம் ஆத்மி

தேர்தல்

தேர்தல்

குஜராத்தில் 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இரண்டாம் கட்ட தேர்தல் 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக மாபெரும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மூன்றாவது பெரிய கட்சியாகும் என்றும் கூறப்படுகிறது.

எத்தனை இடங்கள்

எத்தனை இடங்கள்

குஜராத்தில் பாஜக 131-151 இடங்களை பெற்று வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது. பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று இந்தியா டுடே கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் 16-30 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவிக்கிறது. இருந்த இடங்களையும் இழக்கும் மோசமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவித்து உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி - P-MARQ ககணிப்பு வெளியிட்டு உள்ளது. குஜராத் எக்சிட் போலின்படி காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 30க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். அதாவது காங்கிரசுக்கு இது படுதோல்வி என்று கணிப்பு தெரிவிக்கிறது. மேலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் என்று இந்த ரிபப்ளிக் டிவி கணிப்பு தெரிவிக்கிறது.

கணிப்பு

கணிப்பு

பெரும்பாலான கணிப்புகள் இதே தகவலைத்தான் தெரிவித்து உள்ளன. கணிப்புகள்படியே குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. முதல்கட்ட நிலவரங்களின்படி பாஜக 150 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பதை தபால் மற்றும் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வரலாறு காணாத வெற்றி

வரலாறு காணாத வெற்றி

இதன் மூலம் குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் அங்கு பாஜக வெற்றிபெற்றுள்ளது. இந்த முறை 7வது தடவையாக அங்கு பாஜக வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. 1995ல் ஹரிச்சந்திரா பட்டேல் தலைமையில் பாஜக வென்றதில் இருந்தே அங்கு பாஜகதான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். அதாவது காங்கிரசுக்கு இது படுதோல்வி என்று கணிப்பு தெரிவிக்கிறது

காங்கிரஸ் தோல்வி

காங்கிரஸ் தோல்வி

மேலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிகபட்சம் ஆம் ஆத்மி 10 இடங்களை பெறும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் எப்படி 77 இடங்களில் இருந்து 30க்கும் குறைவான இடங்களுக்கு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வருகை காரணமாக அங்கு காங்கிரஸ் வாக்குகளை இழக்கிறதா? எதிர்க்கட்சி வாக்குகள் பிரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 31 இடங்களில் பாஜக முதல் இடத்திலும், ஆம் ஆத்மி இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதன் அர்த்தம் காங்கிரஸ் வாக்குகளை ஆம் ஆத்மி வெகுவாக பிரித்து உள்ளது. இது பாஜகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி உள்ளது.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. பஞ்சாப்பிற்கு இணையாக குஜராத்தில் ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது. அங்கு ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக இசுடான் காட்வி களமிறக்கப்பட்டு இருந்தார். குஜராத்தில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி நெறியாளராகவும் இவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விடிவி என்ற செய்தி நிறுவனத்தில் இவர் மஹாமந்தன் என்ற நிகழ்ச்சியை தொகுதி வழங்கி வந்தார். இது செய்தி மற்றும் விவாதம் செய்யும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் குஜராத் மக்கள் இடையே மிகப்பெரிய அளவில் இவர் பிரபலம் அடைந்தார். மக்கள் இடையே மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி வரவேற்பு பெற்றதால், நிகழ்ச்சி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி இந்த முறை தோல்வியை தழுவினாலும் பெரிதாக வாக்குகளை பிரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளை பிரித்து.. காங்கிரசுக்கு தோல்விக்கு பதிலாக படுதோல்வியை கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது.

English summary
Is AAP's entrance into Gujarat Turf indirectly helped BJP to win in the Gujarat assembly easily?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X