பெருநகரங்களில் மின்கட்டணம் மிக அதிகம் செலுத்த நேரிடுவது ஏன் தெரியுமா?
டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, 50% மின் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்துக்கு வீடுகளில் 400 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு இந்த மின் கட்டணம் குறைப்பு பொருந்தும்.
பொதுவாக இந்தியாவில் பெருநகரங்களில் அதிகளவுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களில் இந்த நிலைதான் இருக்கிறது. இது தொடர்பாக "Indiaspend" இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

மும்பையைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் எனர்ஜியும் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ5.13 செலுத்த வேண்டும். மின் கட்டண யூனிட்டுகள் அதிகமாகும் போது ஒரு யூனிட்டுக்கு ரூ11.27ம் செலுத்த வேண்டியுள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரோ ஒரு யூனிட்டுக்கு ரூ10.72 முதல் ரூ15.3 வரை செலுத்த நேரிடுகிறது.
டெல்லியில் வீட்டு மின் கட்டணம் ரூ4.52 முதல் ரூ5.57 ஆகவும் பெங்களூருவில் ரூ3.81 முதல் ரூ6.19 வரையிலும் செலுத்த வேண்டியுள்ளது.
குஜராத்தில் வீட்டுக்கான மின் கட்டணம் ரூ4.05 முதல் ரூ 5.68 வரை கட்ட வேண்டியுள்ளது.
ஆனால் ஒரு யூனிட் மின்சார தயாரிப்புக்கான கட்டணம் எப்படி இருக்கிறது தெரியுமா? அனல்மின்சாரம் மூலம் ஒரு யூனிட்டுக்கு ரூ2.79 முதல் ரூ4.01 வரை; அணுசக்தி மூலம் ஒரு யூனிட்டுக்கு 0.95 பைசா முதல் ரூ3.41 வரை, இயற்கை எரிவாயு மூலமாக ரூ2.66 முதல் ரூ3.99 வரை என செலவாகிறது.
இப்படி இருக்கும் போது மின்சாரத்துக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன்? மின்சார விநியோகத்துக்காகத்தான் இவ்வளவு செலவும் அதிகமாகிறதாம்.
இப்படி மின்சார விநியோகம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இவைகளால்தான் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாம். மற்றொரு காரணம் மின் திருட்டுமாம்..
தமிழகம், கர்நாடகாவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது; பீகார், ஜார்க்கண்ட், உ.பி.யில் விவசாயிகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ2க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால்தான் இந்திய மாநிலங்களின் மின்வாரியங்கள் மிக மோசமான நட்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறதாம்..
-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications