"உன் பெயர் என்ன முகமதா? ஆதாரை காட்டு" முதியவரை கொடூரமாக தாக்கும் ஷாக் வீடியோ.. உடல் சடலமாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மனநல பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து நீமுச் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கிய போது, இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் பார்த்து, "உனது பெயர் முகமதா?" என்றே ஆவேசமாக கேட்டதும், பதில் சொல்லத் திணறும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரைப் பலமுறை தாக்குவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

பாஜக

பாஜக

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நீமுச் மாவட்டத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கும் நபர் தினேஷ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் முனிசிபள் காப்ரேஷன் உறுப்பினர் கணவர் தான் தினேஷ் குஷ்வாஹா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீசார்

போலீசார்

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "ரத்லம் மாவட்டத்தில் உள்ள சர்சியைச் சேர்ந்த முதியவர் பன்வர்லால் ஜெயின். கடந்த மே 15ஆம் தேதி மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்ற அவர், அதன் பின்னர் காணாமல் போனார். இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்படி அவரது புகைப்படங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பித் தேடும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில் தான், நேற்று நீமுச் மாவட்டத்தில் சாலையோரம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது" என்றனர்.

ஷாக் வீடியோ

இதையடுத்து உயிரிழந்த பன்வர்லால் ஜெயின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பன்வர்லால் ஜெயினுக்கு இறுதிச் சடங்கு செய்தனர். அதன் பின்னரே குடும்பத்தினருக்கு இந்த வீடியோ குறித்துத் தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பெஞ்சில் அமர்ந்து இருந்த ஜெயினிடம், "உன் பெயர் என்ன? முகமதா?" என்று தினேஷ் குஷ்வாஹா ஆவேசமாகக் கேட்கிறார். பின்னர் திடீரென அவரை அறையத் தொடங்குகிறார்.

கைது

கைது

இந்தச் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொலை உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் பாஜகவைக் காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+