திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்- ஷாக் தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம்- ஷாக் தகவல்கள்- வீடியோ

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில் எப்படியெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகீர் சதித் திட்டம் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதனை கேரளா போலீஸ் உறுதி செய்தும் உள்ளது.

தாக்குதல் சதி ஆடியோ

தாக்குதல் சதி ஆடியோ

இந்நிலையில் கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்துவது எப்படி என்பது தொடர்பான ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆடியோ ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. மலையாள மொழியில் பேசப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

கூட்டத்தில் தாக்குதல்

கூட்டத்தில் தாக்குதல்

திருச்சூர் பூரம் மற்றும் கும்பமேளாவில் முதலில் உணவில் விஷத்தைக் கலக்க வேண்டும். அதன் பின்னர் கூட்ட நெரிசலில் வாகனங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்த வேண்டும். இப்படியான தாக்குதல் முறையை உலகம் முழுவதும் ஐ.எஸ். இயக்கம் கடைபிடித்து வருகிறது.

கத்தி தாக்குதல்

கத்தி தாக்குதல்

இசைக்கச்சேரிகளில் நூற்றுக்கணக்கானோரை நமது ஆதரவாளர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். ரயிலை தடம்புரளச் செய்வது அல்லது ஆகக் குறைந்தபட்சம் கத்தியால் தாக்குவது என்பதை நாம் மேற்கொள்ள வேண்டும். நம்மை அவர்கள் கொல்ல நினைத்தாலும் அவர்கள் வென்றுவிடக் கூடாது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

இவ்வாறு அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. காசர்கோடைச் சேர்ந்த ரஷீத் அப்துல்லா என்கிற ஐஎஸ் தீவிரவாதிதான் இந்த ஆடியோவில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Amidst claims by the Kerala police that at least 100 from the state have joined the Islamic State, a new audio clip calling for attacks on Thrissur pooram and Kumbh Mela has surfaced.
Please Wait while comments are loading...