கனடாவை சேர்ந்த சீக்கிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த ஐஎஸ் திட்டம்
டெல்லி: கனடாவை சேர்ந்த சீக்கிய தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து டெல்லியில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஸ்லீப்பர் செல் ஆட்களை வைத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று முன்பு தகவல் கிடைத்தது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடவும் திட்டமிட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கனடாவை சேர்ந்த சீ்க்கிய தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து டெல்லியில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பெண் சீக்கிய தீவிரவாதி ஒருவர் செல்போனில் பேசியதை உளவுத் துறை அதிகாரிகள் இடைமறித்து கேட்டபோது தான் இந்த பயங்கர தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தது.
அண்டை நாடுகளான வங்கதசேம், மாலத்தீவுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications