குழந்தைகள் கழுத்தில் விலை பட்டியல் தொங்கவிட்டு விற்கும் ஐஎஸ்ஐஎஸ்- ஐநா அதிகாரி திடுக் தகவல்
பெங்களூரு: குழந்தைகளை கடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், செக்ஸ் அடிமைகளாக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்வதாகவும், உயிரோடு புதைப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நல கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திவரும் தாக்குதல்களை ஆய்வு செய்த ஐநா குழந்தைகள் நல கமிட்டி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மனித வெடிகுண்டு
18 வயதுக்குட்பட்ட ஈராக் சிறுவர்களை தற்கொலை படை தாக்குதல்களுக்காகவும், கேடயமாகவும், வெடிகுண்டுகள் தயாரிப்புக்காகவும், ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை
சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் கொடுமையான முறையில் கொல்லப்படுகின்றனர். கமிட்டியின் உறுப்பினர் ரெனேட் வின்டர் கூறுகையில் "இங்கு நடக்கும் பிரச்சினை உண்மையில் மிக பெரிதாக உள்ளது. கிறிஸ்தவர்கள், யாசிதிகள் மட்டுமின்றி, சன்னி பிரிவு முஸ்லிம் குழந்தைகளையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொல்கின்றனர்.

ஆயுத பயிற்சி
குழந்தைகளுக்கே தெரியாமல் அவர்களை தற்கொலை படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதாக எங்கலுக்கு தகவல் கிடைத்துள்ளது. 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை கூட ஆயுதம் தாங்க பயிற்சி கொடுக்கும் அவலமும் அங்கு நடக்கிறது.

மார்க்கெட்டுகளில் விற்பனை
சிறுபான்மை மதங்களை சேர்ந்த சிறுவர், சிறுமிகளை கடத்தி வரும் தீவிரவாதிகள், மார்கெட்டுகளில் நிற்க வைத்து அவர்கள் கழுத்தில், விலையை எழுதி தொடங்கவிடுகின்றனர். விலை கொடுத்து வாங்கிச் செல்வோர் செக்ஸ் அடிமைகளாக சிறார்களை நடத்துகின்றனர். குழந்தைகளை உயிரோடு புதைத்து கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன. ஈராக் அரசு இந்த விவகாரத்தை எப்படி கையாளப்போகிறது என்பதே கேள்வி" என்றார் ரெனேட் வின்டர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications