சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களை ஏவும் இஸ்ரோ... கவுண்ட் டவுண் தொடங்கியது!
ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக கவுண்ட் டவுண் இஸ்ரோவில் தொடங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளம் உள்ளது. இங்கு வரும் 16ம் தேதி சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ஆறு செயற்கைக்கோள்களின் மொத்த எடை, 625 கிலோ ஆகும். அவற்றில், டெலியோஸ் என்ற செயற்கைக்கோளின் எடை 400 கிலோ ஆகும்.

பூமியை ஆராய...
அந்தச் செயற்கைக்கோள், பூமியைப் பற்றி ஆராய்வதற்காக ஏவப்படுகிறது. மேலும், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இல்லாமல், நேரடியாகவே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 59 மணி நேர கவுண்ட் டவுண் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

20 செயற்கைக் கோள்கள்...
இந்த செயற்கைக்கோள்களையும் சேர்த்தால், இந்த ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 20ஐத் தொடுகிறது. இதுவரை 3 இந்திய செயற்கைக்கோள்களையும், 11 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது.

பிஎஸ்எல்வி...
இவற்றில், 13 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ஏவுகணை மூலமும், ஜிசாட்-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ஏவுகணை மூலமும் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிசாட்-15...
இதுதவிர, ஜிசாட்-15 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை, சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications