நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்
Recommended Video
பெங்களூர்: தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். எனினும் அதிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கப் பெறவில்லை.
சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. இது நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்ள அனுப்பப்பட்டது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர். இந்த மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது.
இதையடுத்து விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்தது. அப்போது நிலவுக்கு மேல் 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் தொடர்பை இஸ்ரோ இழந்தது. இதனால் சந்திரயான் 2 எதிர்பார்த்தபடி நிலவில் இறங்கவில்லை. இதையடுத்து இஸ்ரோ தலைவரும், விஞ்ஞானிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆர்ப்பிட்டர் பிரக்யான்
இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பிட்டர் கருவி நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

கருவி
இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆர்ப்பிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனினும் அதன் சிக்னல் கிடைக்கவில்லை.

500 மீ. தூரம்
அந்த லேண்டர் நிலவின் மேற்பரப்பில்தான் விழுந்துள்ளது. நிலவில் இறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீட்டர் தூரத்தில் லேண்டர் இருக்கிறது. 2.1. கி.மீ. தூரத்தில் லேண்டர் இருந்த நிலையில் நிலவில் எடை 6-இல் ஒரு பங்கு இருக்கும் என்பதால் கீழே விழுந்த லேண்டர் எந்தவித சேதாரம் அடைந்திருக்காது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிக்னல்
இதனால் லேண்டரில் உள்ள ஏதாவது ஒரு கருவி மூலம் அதன் சிக்னலை திரும்ப பெற இஸ்ரோ முயற்சித்து வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ஆர்ப்பிட்டர் அனுப்பிய லேண்டரின் புகைப்படங்களை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications