"மிஷன் சக்ஸஸ்".. குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் லாஞ்ச்.. இஸ்ரோ தலைவர் சொன்ன குட் நியூஸ்
ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு பூமத்திய ரேகை ஒரு முக்கயமான கணக்காகும். இதனையொட்டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தினால் இலக்கை குறைவான எரிபொருளுடன் எட்டிவிடலாம்
அமராவதி: இஸ்ரோ சார்பில் நேற்று(பிப்.10) விண்வெளிக்கு அனுப்பப்பட்ட SSLV - D2 ராக்கெட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்திய நிலையில், இனி இந்த வகை ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் SSLV - D1 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த சுற்று வட்டப்பாதையில் இது செயற்கைக்கோள்களை சரியாக நிலை நிறுத்தவில்லை. எனவே இத்திட்டம் தோல்வியடைந்தது. ஆனால் முயற்சியை கைவிடாத இஸ்ரோ மீண்டும் ஒரு SSLV - D2 ராக்கெட்டை தயார் செய்து அதில் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் நேற்று ஏவியது. இந்த முயற்சி எதிர்பார்த்த அளவு வெற்றியடைந்தது.
இந்த ராக்கெட் மூலம் இஸ்ரோவுக்கு சொந்தமான EOS-07, அமெரிக்காவின் அன்டாரிஸ் நிறுவனத்தினுடைய Janus-1, ஆசாதி சாட்-2 என மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த மூன்றில் ஆசாதி சாட்-2 எனும் செயற்கைக்கோள்தான் ஹைலைட். ஏனெனில் இந்த செயற்கைக்கோள்களுக்கு தேவையான சிப்களை தேசிய அளவில் 75 பள்ளிகளை சேர்ந்த 750 அரசு பள்ளி மாணவிகள் 'சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

அசத்திய அரசுப்பள்ளி மாணவிகள்
சிப்களை உருவாக்கிய மாணவிகள் குழுவில் மதுரை திருமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகளும் இடம்பெற்றிருந்தனர். இப்படியாக இந்த மூன்று செயற்கைக்கோள்களையும் SSLV - D2 ராக்கெட் விண்ணில் சுமார் 450 கி.மீ தொலைவில் நிலை நிறுத்தியது. இவ்வாறு பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த SSLV வகை ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த திட்டம் வெற்றியடைந்ததையடுத்து சக விஞ்ஞானிகளிடம் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,

வாழ்த்துகள்
"தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு தற்போது இரண்டாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கிறோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். தற்போது SSLV ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்" என்று கூறியுள்ளார். SSLV வகை ராக்கெட்டுகள் மேற்குறிப்பிட்டதைப்போல பூமியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த பயன்படுகிறது. குறைந்த சுற்றுவட்டப்பாதை என்பது பூமியின் தரை பகுதியிலிருந்து சுமார் 500 கி.மீ வரை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினம் ஏன்?
ராக்கெட்டுகளை விண்ணில் ஏக பூமத்திய ரேகை ஒரு முக்கியமான கணக்காகும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எளிதில் மிஷன் சக்ஸசாகும். அந்த வகையில் ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகையிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்திருக்கிறது. ஆனால் குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில்தான் அமைந்திருக்கிறது. எனவே இங்கிருந்து ராக்கெட் ஏவப்படும்போது எரிபொருள் குறைந்த அளவில் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும். மட்டுமல்லாது, நெல்லை மாவட்டத்தின் மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்திலிருந்துதான் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.

ககன்யான்
மேலும் அதன் உதிரிபாகங்களும் இங்கிருந்துதான் சாலை மார்கமாக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் இந்த போக்குவரத்து செலவுகளும் குறையும். இதனையடுத்து ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுப்பெற்று கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்திலிருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறியிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர், "மனிதர்களை விண்ணுக்கு கொண்டு செல்லும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்று வருகிறோம்" என்றும் கூறியுள்ளார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications