பி.எஸ்.எல்.வி. சி–27: கடல் ஆராய்ச்சிக்கான செயற்கை கோளுடன் மார்ச் 9ல் விண்ணில் ஏவப்படுகிறது!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் வரும் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனராக கிரண்குமார் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் 4 நிலைகளை கொண்டது. இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டின் எடை 320 டன் கொண்டது என ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் கூறியுள்ளார்.

Isro to launch fourth navigational satellite on 9 March

கடல்சார் ஆராய்ச்சிக்காக

இஸ்ரோ செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி 3 செயற்கை கோள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து

கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது.

மார்ச் 9ஆம் தேதி

தொடர்ந்து 4-வது செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 9-ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 வருடமாகும்.

59 மணி நேர கவுண்ட்டவுன்

இதற்கான, இறுதிகட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. செயற்கைகோளை சுற்றி வெப்பத்தகடு இன்று பொருத்தப்படுகிறது. ராக்கெட்டை செலுத்துவதற்கான 59 மணி நேர கவுண்ட்டவுன் 7-ஆம் தேதி காலை 7.35 மணிக்கு தொடங்குகிறது.

துல்லியமாக கணக்கிட

இயற்கை சீற்றம், இயற்கை இடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு ஆகிய ஆய்வுக்காக இந்த செயற்கை கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்

செயற்கைகோள் 1,425 கிலோ எடை கொண்டது. மீதம் உள்ள 3 செயற்கை கோள்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ ஏவிய 28 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில், 27 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் சென்றுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் எம்.ஒய்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+