ஜிம் கார்பெட் சரணாலயத்தில் குவியும் சைபீரிய பறவைகள்
நைனிடால்: சின்னச்சின்ன கால்களை உந்தித்தள்ளி தண்ணீரில் உற்சாகமாக நீந்தும் இந்த குள்ள வாத்துக்கள் பலகிலோமீட்டர் தூரம் கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளது.
சைபீரியாவில் இருந்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவை கடந்து பறந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பறவைகள் சரணாலயத்தில் வந்து குவிந்துள்ளன இந்த பறவைகள். குளிர்காலத்தை ஒட்டி வருகை தந்துள்ள வெளிநாட்டு பறவைகளைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இமயமலையின் அடிவாரத்தில் அமைதியாக அமைந்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பூங்காவின் இயற்கை எழிலை காணவும் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளைக் காணவும் எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
மயில்கள், பீஸன்ட், மாடப்
புறா, ஆந்தை, ஹார்ன்பில், பார்பெட், லார்க், மைனா, மக்பி, மினிவெட், பாட்ரிட்ஜ், த்ரஷ்,டிட், நுதாட்ச், வாக்டெயில், சன்பேர்டு, பன்டடீங், ஓரியோல், கிங்பிஷர், ட்ராங்கோ, புறா, மரங்கொத்தி, வாத்து, டீல்,கழுகு, நாரை, கார்மோரன்ட், வல்லூறுகள், புல்புல் மற்றும் ஃப்ளை கேட்ச்சர் ஆகிய பறவைகள் இந்த பூங்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கின்றன.
இவைகளைத் தவிர குளிர்காலத்தை ஒட்டி சைபீரிய நாட்டுப் பறவைகள் இங்கு குவிந்துள்ளன. தங்களின் சின்ன இறகுகளை விரித்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை கடந்து இந்தியாவிற்கு வந்து தற்காலிக கூடு அமைத்து இனத்தை விருத்தி செய்துகொண்டு மீண்டும் தங்களின் நாடுகளுக்கு திரும்பி விடுகின்றன.
கிரே வண்ண கால்களை உடைய வாத்துக்கள், காட்வால்ஸ், கிரேட்டர் பிளமிங்கோ,நார்தன் பின்டெய்ல், நார்த்தன் ஷல்வார், ரோஸிபிலிகான், கேட்வால் ஆகிய பறவைகள் இங்குள்ள தண்ணீரில் நீந்தி மகிழ்கின்றன. இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகான பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications