எவ்வளவு வாங்குகிறார், வரி கட்டுகிறாரா?: நயன்தாரா வீட்டாரை துருவித் துருவிக் கேட்ட ஐ.டி. அதிகாரிகள்
திருவனந்தபுரம்: நயன்தாராவின் சம்பள விபரம் மற்றும் அவர் ஒழுங்காக வரி செலுத்தி வருகிறாரா என வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டாரிடம் துருவித் துருவி கேள்வி கேட்டுள்ளனர்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. வெற்றி நாயகி என்றே அவரை கூற வேண்டும். அதனால் தான் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை முகம் சுளிக்காமல் அளிக்கிறார்கள்.
சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் நயன்தாராவுடன் ஜோடி போட்டு நடிக்க விரும்புவதால் அம்மணியின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ரெய்டு
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் நயன்தாராவின் வீட்டில் புதன்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

கேரளா
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நயன்தாராவின் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறையினர் கேட்டை பூட்டிவிட்டு சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

சம்பளம்
நயன்தாராவின் வீட்டாரிடம் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார், அவரின் செலவு கணக்குகள், வரிமான வரியை முறையாக கட்டுகிறாரா என குருவித் துருவி கேள்வி கேட்டுள்ளனர். மேலும் வருமான வரி கட்டியதற்கான ஆவணங்களை வாங்கிப் பார்த்துள்ளனர்.

பூர்வீக வீடு
கேரள மாநிலம் திருவல்லாவில் நயன்தாராவின் பூர்வீக வீடு உள்ளது. அதிகாரிகள் அந்த வீட்டிற்கும் சென்று தீவிர சோதனை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் சோதனை நடத்தியபோது நயன்தாரா வீட்டில் இல்லை.

அந்த வீட்டிலும்?
நயன்தாரா விளம்பர படத்தில் நடித்து கிடைத்த பணத்தில் சென்னை பெசன்ட் நகரில் புதிய வீடு வாங்கியிருக்கிறார் என்று கூறப்பட்டது. அந்த வீட்டிலும் நேற்று சோதனை நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications