ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... 'மாபியா' ஜனார்த்தன ரெட்டி சுரங்க நிறுவனத்தில் ஐடி அதிரடி ரெய்டு
சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூர்: மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் செய்து வைத்து சர்ச்சையில் சிக்கிய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
நாட்டில் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது முதலே அன்றாடங்காய்ச்சிகள், நடுத்தர மக்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். பொதுமக்கள் ஒரு நாளைக்கு ரூ500 கூட கிடைக்காமல் அவதிப்பட்ட நேரத்தில் மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணத்தை நடத்தினார் சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி.

சுரங்க முறைகேடு வழக்கில் சிறைக்குப் போன ஜனார்த்தன ரெட்டி தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் பாஜகவின் முன்னாள் அமைச்சர்... ஆனாலும் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் குறித்து ராஜ்யசபாவிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
நாடு முழுவதும் இந்த திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் பெல்லாரியில் மாபியா ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications