டெல்லி ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற முதலில் கோரிக்கை விடுத்த பாகிஸ்தானியர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஔரங்சீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்தல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது ஒரு பாகிஸ்தானியர் என்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஔரங்கசீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைக்கப் போவதாக மாநகராட்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. சாலையின் பெயரை மாற்ற சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நாளிதழான ஆர்கனைசரில் கூறியிருப்பதாவது,
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தாரிக் பதேஹ் கடந்த 2013ம் ஆண்டு இந்தியா வந்தபோது முகலாய மன்னர் ஔரங்கசீப் பெயரில் சாலை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அந்த சாலையின் பெயரை மாற்றுமாறு இந்திய முஸ்லீம்களுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த சாலைக்கு ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவின் பெயரை வைக்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்நிலையில் கலாம் மறைவுக்கு பிறகு ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை வைக்க வேண்டும் என அவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் பிரதமர் மோடியை அணுகி ஔரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.
டெல்லியின் முக்கிய பகுதியில் இருக்கும் ஔரங்கசீப் சாலையில் பல கோடீஸ்வரர்கள் வசித்து வருகிறார்கள். ஔரங்கசீப் 6வது முகலாய மன்னர் ஆவார். 17வது நூற்றாண்டில் அவர் இந்திய துணைகண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்தார். ஔரங்கசீபால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூரின் பெயரை ஔரங்கசீப் சாலைக்கு வைக்க வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழு கடந்த 2014ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications