கேரள மீனவர்கள் கொலை வழக்கில் கைதான இத்தாலிய கடற்படை வீரருக்கு பக்கவாதம்
டெல்லி: 2 கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டு கடற்படை வீரர்கள் 2 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி கேரளா வந்த இத்தாலியைச் சேர்ந்த எம்.டி. என்ரிகா லெக்சி என்ற கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்களை துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் பலியாகினர். அந்த இருவரையும் கடற்கொள்ளையர்கள் என்று நினைத்து சுட்டதாக இத்தாலிய வீரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ லாட்டோர் மற்றும் சால்வடோர் கிரோன் ஆகியோரை கைது செய்தனர். அதன் பிறகு அவர் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறைவாசம் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லாட்டோருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து அறிந்த இத்தாலி நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்டா பினோட்டி டெல்லி வந்து லாட்டோரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். லாட்டோருடன் அவரது குடும்பத்தாரும் இந்தியாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே எங்கள் கடற்படை வீரர்கள் இருவரை இத்தாலிக்கு கொண்டு வருவதே எங்கள் அரசின் முக்கிய வேலை என இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பெடரிகா மொகிரினி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications