ராணுவ தளவாடங்களை உரிய நேரத்தில் வழங்காத ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள்- சி.ஏ.ஜி. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராணுவ தளவாடங்களை உரிய நேரத்தில் ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் வழங்கவில்லை; இதனால் எல்லையில் உள்ள இந்திய-திபெத் படைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.)தமது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இது தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை:

ராணுவ தளவாடங்களை தயாரித்து வழங்குவதற்காக, ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு கடந்த 6 ஆண்டுகளில் முன்பணமாக ரூ.15.58 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ITBP affected as ordnance factories delayed arms supplies: CAG

விதிமுறைகளின்படி முன்பணம் வாங்கிய தேதியில் இருந்து 9 மாதங்களுக்குள் தளவாடங்களைத் தயாரித்து பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் அவ்வாறு செய்யவில்லை.

பாதுகாப்புப் படைக்கு அவசரமாகத் தேவைப்படும் ஆயுதங்களை உரிய நேரத்தில் தயாரித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு உள்ளது. ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கு முன்பணம் வழங்குவது, உரிய நேரத்தில் பாதுகாப்புப் படைக்கு தொழிற்சாலைகள் ஆயுதங்களை வழங்குவது ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+