உறைய வைக்கும் பனி... வெற்று மார்போடு யோகா செய்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்!
உறைய வைக்கும் பனிமலைகளுக்கு நடுவே ஐடிபிபி வீரர்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர்.
டெல்லி: இந்தோ-திபெத்தியன் எல்லைப்படை போலீஸ் வீரர்கள் இமயமலையில் நடுங்கும் குளிரில் பனி சூழ்ந்த பகுதியில், மேல் சட்டை அணியாமல் யோகா செய்த படங்கள் வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரம் முதல் 18,500 அடி உயரம் கொண்ட, உறைபனி தட்பவெப்ப நிலையில் இந்தியா சீனா இடையிலான சுமார் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லைப்பகுதியை இரவு பகல் பாராமல், குளிரைத் தாங்கிக் கொண்டு 176 நிலைகளில் ஆயிரக்கணக்கான இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். கடந்த 1962ம் ஆண்டு இந்த எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது.

அங்கு அவர்கள் செய்யும் சாகசங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தங்களது இணைய தளத்திலும், சமூகவலைதளப் பக்கத்திலும் ஐடிபிபி எனும் இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை பதிவேற்றம் செய்து வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் அங்குள்ள வீரர்கள் உறைபனியில் யோகா செய்த புகைப்படங்களை இந்தோ திபெத்தியன் எல்லை போலீசார் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படங்களின் சிறப்பே, அதில் இடம்பெற்றிருந்த வீரர்கள் உறைய வைக்கும் குளிரில் சட்டை அணியாமல் வெற்று மார்பில் யோகா செய்வது போல் இருந்தது தான். இதனை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்மூலம், அந்த வீரர்களின் சகிப்புத்தன்மை, உடல் வலிமை மற்றும் அவர்களது மனபலம் தெரிவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ரியல் ஹீரோக்களான அவர்களுக்கு தங்களது சல்யூட்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications