சந்திரபாபு நாயுடு செய்த பாவம்.. சிறப்பு பூஜைக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி
விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதையடுத்து, இனிமேல் திருப்பதி லட்டு பிரசாதத்தில் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் நந்தினி நெய்யை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், திருப்பதி பிரசாதமான லட்டு மற்றும் நெய்யின் தரத்தில் இனி எந்தவிதமான சமரசமும் இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால் புனிதம் கெட்டுவிட்டதால் தோஷ நிவர்த்திக்காக திருப்பதி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் மூலவர் சன்னதி, லட்டு தயாரிப்பு கூடம், அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு கவுண்டர்கள், கோயில் வளாகத்தில் தெளிக்கப்பட்டன.
இந்நிலையில், செப்டம்பர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித்தைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது என்று கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூஜையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications