ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு! சொந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார்! இது ஆந்திர அரசியல்
அமராவதி: ஆந்திராவில் இப்போது ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், இவரும் கடந்த முறை எங்கு போட்டியிட்டனர்.. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளனர் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இன்று 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் ஆந்திர மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. அங்கு இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இவ்விரு கட்சியின் தலைவர்கள் எங்குப் போட்டியிடுகிறார்கள்.. அதில் கடந்த முறை அவர்கள் பெற்ற வாக்குகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
ஜெகன்மோகன் ரெட்டி: இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள புலிவெந்துலா என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த புலிவெந்துலா தொகுதி ஒஸ்எஸ்ஆர் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு முதலே ஒஸ்எஸ்ஆர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்த தொகுதியில் வென்றுள்ளார்.
இந்த தொகுதியில் 2010ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஒய்எஸ்ஆர் குடும்பத்தினர் வென்றுள்ளனர். அதன் பின்னர் காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய நிலையில், 2011க்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த தொகுதியில் 3 முறை வென்றுள்ளது.
மிக பெரிய பெற்றி: 2014, 2019 என இரு தேர்தல்களில் ஜெகன்மோகன் ரெட்டி இந்தத் தொகுதியில் வென்றுள்ளார். கடந்த 2019 தேர்தல் சமயத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகனும், தெலுங்கு தேசம் சார்பில் சதீஷ் குமாரும் போட்டியிட்டனர். இதில் சதீஷ் குமார் வெறும் 42 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், ஜெகன்மோகன் சுமார் 1.32 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சந்திராபாபு நாயுடு: ஆந்திராவில் ஜெகனுக்கு இந்த முறை சந்திரபாபு நாயுடு மிகக் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறார். ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர் பாஜக மற்றும் பவன் கல்யாண் உடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார். சந்திரபாபு நாயுடு இந்த முறை குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி சந்திரபாபு நாயுடுவின் கோட்டையாகவே இருக்கிறது.
கடந்த 1983 முதலே அவரது தெலுங்கு தேசம் கட்சி தான் இங்கு வென்றுள்ளது. குறிப்பாக 1989 முதல் சந்திரபாபு நாயுடு தான் இங்கு வென்று வந்துள்ளார். அந்தளவுக்கு இங்கு சந்திரபாபு நாயுடு வலிமையாக இருக்கிறார். கடந்த தேர்தலில் இந்த குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சந்திரமவுலி, காங்கிரஸ் சார்பில் சுரேஷ் பாபு போட்டியிட்டனர்.
வெற்றி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 3800 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி: இந்த முறை ஆந்திர அரசியல் களம் ஜெகன்மோகன் ரெட்டி vs சந்திரபாபு நாயுடு என்றே உருவெடுத்துள்ளது. இருவருமே தங்கள் கோட்டையில் போட்டியிடுவதால் அவர்கள் தங்கள் தொகுதியில் வெல்வது உறுதி.. ஆனால், ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறுவார்களா என்பதே கேள்வி.. இதற்கான பதில் வரும் ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications