சிறை வாசலில் விரதமிருந்த மக்கள்: அசாராம் அளித்த புனித நீரை விநியோகித்த போலீஸ்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை அலுவலகங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் அவருடைய ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அசாராம் பாபு.
இந்நிலையில் பௌர்ணமி நாளான நேற்று அசாரம் பாபு அடைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் மத்திய சிறைமுன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அசாராம் பாபுவை தரிசனம் செய்ய வந்திருப்பதாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
சிறையில் உள்ள ஒரு நபரை மக்கள் பார்பதற்காக அழைத்து வர இயலாது என்பதை காவலர்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். கைகளில் பூஜைப் பொருட்களுடன் வந்திருந்த அவர்கள், தாங்கள் காலை முதல் அசாராம் பாபுவைப் பார்ப்பதற்காக விரதம் இருப்பதாகவும், அதனால் அவர் கைகளால் தொட்டுத் தரும் புனித நீரையாவது பெற்றுத் தருமாறு வேண்டினர்.
அதனைத் தொடர்ந்து, தனி மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கருதிய சிறை அதிகாரி ஷர்மா, அசாராமிடமிருந்து புனித நீரை பெற்று வந்து போலீசாரை விட்டு அவர்களுக்கு விநியோகிக்கச் செய்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications