சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிப்பு.. கர்நாடக சிறைத்துறை அதிரடி!
பெங்களூர்: கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா விண்ணப்பத்திருந்த நிலையில், அதை சிறைத்துறை எஸ்.பி நிராகரித்துள்ளார்.
தொழில்நுட்ப காரணங்கள் அடிப்படையில் பரோல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கூடுதல் தகவலுடன் மனு தாக்கல் செய்ய சிறைத்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிதாக மனு தாக்கல் செய்ய சசிகலா திட்டமிட்டுள்ளார்.

மனுவில் போதிய விவரம் இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்கு காரணம் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியோ, மனு இன்னும் பரிசீலனையில் இருப்பதாக டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனிடையே, சசிகலா பரோலில் அனுப்பப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து சென்னை காவல்துறை உரிய உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது கட்டாயம். எனவே தமிழக காவல்துறை நெகட்டிவ் ரிப்போர்ட் கொடுத்துவிட்டதாக தினகரன் தரப்பில் பெயர் தெரிவிக்க விரும்பாத சில நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆனால், கர்நாடக சிறைத்துறை அதுபோன்ற தகவலை வெளியிடவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications