ஜெய்ப்பூரில் பயங்கரம்... ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து, இடது பகுதி இறக்கை சேதம்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமா்னம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விமா்னம் நிலை தடுமாறி சறுக்கியது. இதில் விமானத்தின் இடது புற இறக்கை சேதமடைந்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையமும் உடனடியாக மூடப்பட்டது. விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் இந்த விபத்தில் பேராபத்து ஏதும் ஏற்படவில்லை. யாரும் காயம் அடையவும் இல்லை.

குவஹாத்தியிலிருந்து டெல்லி செல்லும் விமானம் அது. 173 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அது டெல்லி போய்க் கொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமா்க நேற்று இரவு ஜெய்ப்பூருக்குத் திருப்பி விடப்பட்டது.
அங்கு தரையிறங்கியபோதுதான் விபத்துக்குள்ளாகி விட்டது. இந்த விபத்து காரணமாக 3 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்குத் திருப்பி விடபட்டன. இன்று பிற்பகலுக்கு மேல் விமான நிலையம் சகஜ நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications