நிர்வாணப்படத்தை பேஸ்புக்கில் போட்டதாக காதலி புகார்... விசாரணைக்கு பயந்த காதலன் தற்கொலை
ஜெய்ப்பூர்: தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தன்னுடைய காதலர் பேஸ்புக்கில் அப்லோடு செய்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாலிபர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவரான விக்ரம் சிங், இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்துள்ளனர். அப்போது இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரமின் காதலி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய ஆடைகளற்ற புகைப்படத்தை விக்ரம் தனது பேஸ்புக்கில் அப்லோட் செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து விக்ரம் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், இது தொடர்பாக அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்ததாக தன்னிடம் தான் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என அஞ்சிய விக்ரம் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தன்னால் தனது பெற்றோரும் உறவினர்களும் போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களே என விக்ரம் மனவேதனையில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications