மன்மோகன் சிங் நல்ல மனிதர்தான் ஆனால்.... அருண் ஜெட்லி
டெல்லி: மன்மோகன்சிங் நல்ல மனிதர்தான் ஆனால் நல்ல தலைவர் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அருண்ஜெட்லி தனது வலைத்தளத்தில் மன்மோகன் பற்றி எழுதியிருப்பதாவது:
மன்மோகன்சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதி அமைச்சராக பதவி வகித்தவர். 1991ல் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன்சிங் பெற்றார். ஆனால் சோனியாகாந்தியின் கீழ், மன்மோகன்சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை.

சோனியா காந்தியால் 'அறிவிக்கப்பட்ட' பிரதமராக மட்டுமே மன்மோகனால் இருக்க முடிந்தது. சோனியாகாந்தி சில காரணங்களால் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து தனதுபெயரை வாபஸ் பெற்றுவிட்டு, மன்மோகனை முன்னிறுத்தினார்.
அந்த எல்லைக்குள்தான் மன்மோகனால் பணியாற்ற முடிந்தது. நாட்டு மக்களிடம் உரையாற்றியபோதெல்லாம் மன்மோகன்சிங் ஒரு தலைவராக தன்னை காண்பிக்கவில்லை. ஏனெனில் அவருக்கு நன்கு தெரியும், அதிகாரம் எல்லாம் கட்சியிடமும், அதை கட்டுப்படுத்தும் குடும்பத்திடமும்தான் உள்ளது என்பது. இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications