அருண்ஜேட்லிக்கு எதிரான கிரிக்கெட் சங்க ஊழல் பைல்களை எடுக்கத்தான் சி.பி.ஐ. சோதனை: கேஜ்ரிவால் 'திடுக்'
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதற்கு ஆதாரமான கோப்புகளை கைப்பற்றத்தான் தமது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லி முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணைக்காக டெல்லி தலைமை செயலகம் மற்றும் முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நாடு முழுவதும் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.பி.ஐ.-ன் இந்த சோதனை நடவடிக்கைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பை கேஜ்ரிவால் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரகுமார் மீதான வழக்குக்குத் தொடர்பே இல்லாத பல கோப்புகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும் அதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிரான டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புகளும் அடக்கம் என்றும் கேஜ்ரிவால் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
என்னுடைய அலுவலகத்தில் இருந்தும் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பில்லாத டெல்லி கிரிக்கெட் சங்க கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
Docs seized from my office.No relation to allegations being probed. Item 7 -file movement register of last one month pic.twitter.com/r2JGLzti1O
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 16, 2015 இதை நான் ஊடகங்களில் சொல்லிக் கொண்டிருக்கும் போது என் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்த கோப்புகளை அவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பதை இனி பார்க்க வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
ஆனால் இதனை அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார். கேஜ்ரிவாலின் அவதூறுகளுக்கு எல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை என ஜேட்லி கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications