சின்னச் சின்னப் பிரச்சினைகளைப் பேசிப் பெரிதாக்குகிறார் சுஷ்மா... ஜேட்லி தாக்கு

நடப்பு நாடாளுமன்றத்தில் லோக்சபா கட்சி தலைவராக இருக்கிறார் சுஷ்மா. ராஜ்யசபா கட்சித் தலைவர் ஜேட்லி. இவர்கள் இருவருக்குமே எப்போதும் முட்டல் மோதல்தான். இருந்தாலும் வெளியில் தெரியாமல்வைத்துக் கொள்வார்கள்.
இந்த நிலையில் சுஷ்மா மீது பகிரங்கமாக பாய்ந்துள்ளார் ஜேட்லி. சமீபத்தில்தான் நரேந்திர மோடிக்கு தனது சீட்டைத் தரக் கூடா்து என்று முரளி மனோகர் ஜோஷியும், ராஜ்நாத் சிங்குக்கு லக்னோவைத் தர அந்தத் தொகுதியின் எம்.பியான லால்ஜி டாண்னும் பகிரங்கமாக போர்க்குரல் கொடுத்தார்கள் என்பது நினைவிருக்கலாம்.
இந்த வரிசையில் தற்போது சுஷ்மா, ஜேட்லி மோதல் வெ்டித்துள்ளது. கர்நாடக பாஜகவில், சர்ச்சைக்குரிய ஸ்ரீராமுலுவை சேர்ப்பதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் அதையும் மீறி ஸ்ரீராமுலுவை கட்சியில் சேர்த்துள்ளனர். இதையடுத்து பகிரங்கமாகவே இந்த சேர்ப்பை தான் எதிர்த்ததாகவும், அதையும் மீறி ஸ்ரீராமுலு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார் சுஷ்மா.
இதற்கு நேற்று ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவதை நாம் தவிர்க்க வேண்டும். ஒருவரை கட்சியில் சேர்ப்பதை எதிர்த்து பகிரங்கமாக பொதுவாக கருத்து தெரிவித்து பிரச்சினையை ஊதுவதை நாம் நிறுத்த வேண்டும்.
சிறு சிறு பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் தருவது சரியானதாக இருக்காது. இது முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உதவி விடும். அது கட்சிக்கு, குறிப்பாக தேர்தல் சமயத்தில் நிச்சயம் நல்லதில்லை.
நமது கவனமெல்லாம் அடுத்து நல்லாட்சியை எப்படி அமைக்க வேண்டும் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும். பார்வையை திருப்பக் கூடாது என்று கூறியுள்ளார் ஜேட்லி.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications