அண்ணன்டா.. தம்பிடா... ஜல்லிக்கட்டுக்காக பெங்களூரில் தமிழர்களுடன் கைகோர்த்து திரண்ட கன்னடர்கள்!
ஜல்லிக்கட்டுக்காக பெங்களூரு டவுன் ஹாலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் தமிழருடன் கன்னடர்களும் கை கோர்த்து முழக்கம் எழுப்பினர்.
பெங்களூரு: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தின வருகின்றனர். பெங்களூரு டவுன்ஹால் முன்பாக தமிழர்களுடன் கன்னடர்களும் கைகோர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழரின் பண்பாட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு. இதற்கு விதிக்கப்பட்ட தடையால் தமிழகமே கொந்தளிப்பு வரலாறு காணாத புரட்சியில் இறங்கியுள்ளது.
தமிழக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடைபெற்றது.

பெங்களூருவில் போராட்டம்
மணிப்பூரின் மோரே நகரிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சமூக வலைதள அழைப்பு
பெங்களூரு டவுன்ஹால் முன்பாக ஒன்று திரள சமூக வலைதளங்களின் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானோர் டவுன் ஹால் முன்பு குவிந்தனர்.

கைகோர்த்த கன்னடர்கள்
தமிழ், கன்னட அமைப்பினர் கை கோர்த்து இப்போராட்டத்தில் இணைந்தனர். இளைஞர்கள், ஐடி பணியாளர்கள் ஏராளமானோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கி முழக்கமிட்டனர்.

போலீஸ் அனுமதி மறுப்பு
முதலில் இந்த போராட்டத்துக்கு பெங்களூரு போலீசார் அனுமதி கொடுத்தனர். பின்னர் அனுமதி மறுத்துவிட்டனர். பின்னர் போலீசார் 1 மணிநேரம் மட்டும் போராட அனுமதித்தனர். இதன்பின்னர் அனைவரையும் கலைந்து போக உத்தரவிட்டனர்.

திருவள்ளுவர் சிலை முன்பாக
இதனிடையே பெங்களூரு உல்சூரில் திருவள்ளுவர் சிலை முன்பாக ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்று திரளவும் தமிழ் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications