ஜம்மு காஷ்மீரை விடுதலை செய்வோம்- இந்தியாவை பழிதீர்ப்போம்: பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத்
லாகூர்: ஜம்மு காஷ்மீரிகளும் பாகிஸ்தானியர்களும் ரத்த சகோதரர்கள்.. ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து விடுதலை செய்வோம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமா உத் தவா தீவிரவாதி ஹபீஸ் சயீத் மிரட்டியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத்தான் என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ ஹபீஸ் சயீத் மீது எந்த ஒரு வழக்கும் இல்லை.. அதனால் அவரை சிறையில் அடைக்க வேண்டிய தேவையில்லை என்று பதிலளித்து வருகிறது.
#Pakistan RT @HafizSaeedJUD
Ghazwae Hind inevitable, Kashmir will be freed, 1971 avenged and Ahmedabad Gujrat victims will get justice
— Myra MacDonald (@myraemacdonald) December 5, 2014 இந்த நிலையில் ஜமா உத் தவா தீவிரவாத இயக்கத்தின் 2 நாள் மாநாடு லாகூரில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ஜமா உத் தவா தொண்டர்கள் 'கமாண்ட்' சீருடையுடன் வலம் வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஹபீஸ் சயீத் பேசியதாவது:
பாகிஸ்தான் அல்லாவின் தேசம். இங்கே இனம் மொழியின் பெயரால் எந்த ஒரு பிரிவினைவாதத்தையும் நாம் அனுமதிக்க முடியாது. இந்தப் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிற இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை எதிர்ப்போம்.
பாகிஸ்தானில் வாழும் அனைவரும் அனைத்துவிதம் வேறுபாடுகளையும் மறந்துவிட்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம். ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் பாகிஸ்தானின் ரத்த சொந்தங்கள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீரை நாங்கள் விடுதலை செய்வோம்.

குஜராத்தில் அகமதாபாத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவோம். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானை துண்டாடிய (வங்கதேச விடுதலைப் போர்) காரணத்தற்காக இந்தியாவை நாம் பழிதீர்ப்போம்.
நாம் கண்ணியத்துடன் வாழ இஸ்லாமிய மதத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். என்னுடைய ஆதரவாளர்களாகிய ஆண்கள், பெண்கள் அனைவரும் நீண்டகால போராட்டத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.
நாம் பாகிஸ்தானை ஒரு முன்மாதிரி இஸ்லாமிய நாடாக உருவாக்க வேண்டும். பாகிஸ்தானில் இனியும் தற்கொலைப் படை தாக்குதல்கள், உயிரிழப்புகளை அனுமதிக்க கூடாது. வன்முறை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம். நாம் பதவிகளுக்காக போராடவில்லை.. முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவே நாங்கள் போராடுகிறோம்.
இவ்வாறு ஹபீஸ் சயீத் பேசினார்.
ஹபீஸ் சயீத்தின் இந்த பேச்சு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து தெற்காசிய அரசியல் விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் மிரா மெக்டொனால்ட், அமெரிக்கா அரசில் பாகிஸ்தான் மாறிவிடும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தால் ஹபீஸ் சயீத்தின் ட்விட்டுகளை அவசியம் படிக்க வேண்டும்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications