உலகின் சக்தி வாய்ந்த விடுதலை புலிகள்.. கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்.. காஷ்மீர் ஆளுநர் பரபர பேச்சு
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்த ஒரு கருத்து நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "காவல்துறையினரை விட்டுவிடுங்கள், காஷ்மீரின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள்" என்று தீவிரவாதிகளுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
கார்கில் மற்றும் லடாக் சுற்றுலாத் விழாவின் தொடக்க விழாவில் ஆளுநர் மாலிக் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவர் கூறியதாவது:
துப்பாக்கியுடன் இந்த 'சிறுவர்கள்' எந்த காரணமும் இல்லாமல் தங்கள் சொந்த மக்களைக் கொல்கிறார்கள்.

கொள்ளையடித்தவர்கள்
இந்த சிறுவர்கள் (தீவிரவாதிகள்) பாதுகாப்பு அதிகாரிகள், சிறப்பு போலீஸ் அதிகாரிகளைக் கொல்கிறார்கள். அவர்களை ஏன் கொல்கிறீர்கள்? உங்கள் நாட்டைக் கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள்; காஷ்மீரின் முழு செல்வத்தையும் கொள்ளையடித்தவர்களில் யாரையாவது நீங்கள் கொன்றிருக்கிறீர்களா?

விடுதலை புலிகள்
ஒருமுறை உள்ளே போய்விட்டால் இதிலிருந்து வெளியே வர முடியாது. துப்பாக்கி ஏந்தினால் எதுவும் அடைய முடியாது, ஏனெனில் இந்தியாவில் துப்பாக்கியால் அரசை வளைக்க யாராலும் முடியாது என்பதே வரலாறு. உலகின் சக்திவாய்ந்த 'தீவிரவாத அமைப்பாக' விளங்கிய விடுதலை புலிகள் அமைப்பே முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நீங்கள் எல்லாவற்றையும் பேச்சுவார்த்தையால் தீர்த்துக் கொள்ளுங்கள்.

என்கவுண்டர் போதும்
இங்கு சுமார் 250 குழந்தைகள் (தீவிரவாதிகள்) மட்டுமே உள்ளனர். அதில், 100-125 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். ஒரு என்கவுண்டரை ஆரம்பித்தால், அவர்கள் முழுக்க அழித்து ஒழிக்க, இரண்டு நாட்கள்தான் ஆகும்.

வாழும்போதே சொர்க்கம்
இப்போது ஆசாத் அல்லது சுயாட்சி பற்றி சொல்லுவதில்லை. ஆனால் நீங்கள் செத்த பிறகு, சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்று மவுல்விகளால் அவர்கள் மூளைச் சலவைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நான் வாழும் போது இரண்டு சொர்க்கங்களைப் பற்றி சொல்கிறேன்: ஒன்று காஷ்மீர்; மற்றொன்று ஒரு நல்ல முஸ்லீமாக வாழ்வது. இவை இரண்டும் வாழும்போதே சொர்க்கம் தருபவை. நீங்கள் ஏன் பயனற்ற முறையில் இறந்து கொண்டிருக்கிறீர்கள்?

காஷ்மீர் நிலைமை மாற்றம்
காஷ்மீரில் நிலைமை மாறிக்கொண்டு உள்ளது. 30 ஆண்டுகளில் முதல் முறையாக, உள்துறை அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹுரியத் எந்த பந்த் அழைப்பையும் கொடுக்கவில்லை. விரட்டிவிடப்பட்ட, காஷ்மீர் பண்டிட்களை திரும்ப அழைத்து வருவது பற்றி நான் பேசியபோது, ஹுரியத் தலைவரும் அதே கருத்தை கொண்டிருப்பதாகவும் அவர்கள் திரும்பி வர வேண்டும் என்றும் கூறினார். இவ்வாறு ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications