காஷ்மீரில் மீண்டும் சோகம்.. தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் பலி
Recommended Video

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், இன்று அதிகாலை, தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் பின்க்ளான் என்ற பகுதியில், பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து 2 தீவிரவாதிகள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த 14ம் தேதி, சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தி, 40 பேர் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின், அதில் அகமது தார் என்பவருடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின்போது, 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள், ஸ்ரீநகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, 4 வீரர்களும் பலியாகினர்.
எதிர்தரப்பில் 1 தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அரசு தரப்பில் இந்த மரணம் தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தான் எல்லையில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், இன்றைய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications