2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படாதது ஏன்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படாதது ஏன் தெரியுமா? 10 ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக 5 ஆண்டு சட்டசபை பதவிக்காலத்தை கொண்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது இதற்கு முன்னர் எல்லா மாநிலங்களுக்கும் 6 ஆண்டுகள் சட்டசபையின் பதவிக்காலமாக இருந்தது. ஆனால் 1970களில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

எனினும் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் அதே 6 ஆண்டுகளே இருந்தது. அதன்படி அது போல் 2014 ஆம் ஆண்டு கடைசியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தற்போது சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தலானது நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் 5 ஆண்டுகள் சட்டசபையின் பதவிக் காலம் என 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுமே சட்டம் கொண்டு வரப்பட்டது தற்போது தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கு 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அது போல் 20,632 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படாதது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். 2014 ஆம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் மெஹபூபா முப்தியின் பிடிபி கட்சிக்கு பாஜக ஆதரவு கொடுத்து ஆட்சியில் அமர வைத்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு பிடிபி- பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதையடுத்து பிடிபி கட்சிக் கொடுத்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமலில் இருந்தது. இதனால் 2020 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படவிருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு, காஷ்மீர் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அத்துடன் சட்டசபையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்ற ஷரத்தும் அமலுக்கு வந்தது.
ஆனால் தொகுதி வரையறை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2024, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்துதான் ஜம்மு காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications