ஜம்மு காஷ்மீர் தேர்தலில் செம்ம ட்விஸ்ட்.. பாஜக, காங்கிரஸ் மாநில தலைவர்கள் படு தோல்வி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவ்ர் தாராசந்த் ஆகியோர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் சட்டசபை உருவாக்கப்பட்டது. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை.

உச்சநீதிமன்றத்தின் நெர்க்கடியால் தற்போது ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் தொடக்கம் முதலே தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களைவிட கூடுதலான இடங்களைப் பெற்றிருக்கிறது. பாஜக 29 தொகுதிகளிலும் வென்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதலாவது ஆட்சியை தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் அமைக்க இருக்கிறது. காங்கிரஸைவிட பாஜக தனித்து போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் காங்கிரஸும் ஆட்சி அமைக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது. பாஜகவுக்கும் காங்கிரஸைவிட அதிக இடங்களில் வென்றுளோம் என மகிழ்வடைகிறது.
ஆனால் இந்த தேர்தலில் வினோதம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இருவருமே தாங்கள் போட்டியிட்ட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர். நவ்செரா தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரைனா போட்டியிட்டார். இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் சுரிந்தர் குமார் சவுத்ரியிடம் 7819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ரவீந்தர் ரைனா.
அதேபோல சாம்ப் சட்டசபை தொகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரா சந்த் போட்டியிட்டார். இத்தொகுதியில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாப தோல்வியைத் தழுவினார் தாரா சந்த். சாம்ப் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சதீஷ் சர்மா 33985 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜகவின் ராஜீவ் சர்மா 27056 வாக்குகளும் காங்கிரஸ் தலைவர் தாரா சந்த் வெறும் 16449 வாக்குகளையும் பெற்று தோல்வியைத் தழுவினர். ஜம்மு காஷ்மீரில் இரு பெரும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு வாக்காளர்கள் தோல்வியையே பரிசாக கொடுத்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications