ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு பேக்ஃபயர்? தடுமாறும் பரூக்! லிஸ்டில் இல்லாத முப்தி! ரிபப்ளிக் கணிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகள் கழித்து நடந்த சட்டசபை தேர்தலில் , தொங்கு சட்டசபை அமையும் என ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக 5 ஆண்டு சட்டசபை பதவிக்காலத்தை கொண்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. அதாவது இதற்கு முன்னர் எல்லா மாநிலங்களுக்கும் 6 ஆண்டுகள் சட்டசபையின் பதவிக்காலமாக இருந்தது. ஆனால் 1970களில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

எனினும் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் அதே 6 ஆண்டுகளே இருந்தது. அதன்படி அது போல் 2014 ஆம் ஆண்டு கடைசியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தற்போது சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தலானது நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் 5 ஆண்டுகள் சட்டசபையின் பதவிக் காலம் என்ற விதிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கு 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அது போல் 20,632 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் பாஜக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
இவற்றில் பாஜகவும் பரூர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் 28 முதல் 30 இடங்களிலேயே வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறிப்பிட்டுள்ளது. அதாவது பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த தேர்தலில் பரூக் அப்துல்லா கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்றே கணித்துள்ளது.
அது போல் காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 6 இடங்களிலும் மெஹபூபா முப்தியின் பிடிபி கட்சிக்கு 5 முதல் 7 இடங்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும் பாஜகவும் மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என தெரிகிறது.
தொங்கு சட்டசபை என்பதால் இந்த இரு பெரிய கட்சிகளும் யாருடையாவது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு எதிரான வாக்குகளே தேசிய மாநாட்டுக் கட்சிக்கு கிடைத்திருக்கும் நிலையில் நாங்கள் எதற்காக அவர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications