Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணி ஆட்சிதான்.. ஆனால் காங்கிரஸ் வாங்கியது 6 சீட்தான்.. ஜம்மு காஷ்மீரில் கதர் கட்சி பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி உள்பட 4 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமாகி உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

jammu kashmir assembly election results 2024 jammu kashmir election exit polls congress 2024 2024

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளன. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.

‛இந்தியா' கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் 33 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டு கட்சி 52 கட்சிகளிலும் போட்டியிட்டது. அதேபோல் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்கள் தனித்தனியாக போட்டியிட்டனர். இன்று ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சி உள்பட 4 கட்சிகள் அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.

அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும்.

இந்த ஆண்டு தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது முந்தைய 2014 தேர்தலை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் என்பது 11.97 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. மாறாக காங்கிரஸ் கூட்டணியில் 42 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் ஓட்டு சதவீதம் என்பது 23.43 சதவீதமாக உள்ளது.

அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜகவின் ஓட்டு சதவீதம் என்பது 25.64 சதவீதமாக உள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் சுயேச்சைகளும், ஒரு சீட்டில் ஆம்ஆத்மியும், இன்னொரு சீட்டில் ஜேஎன்பி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2014 ல் நடந்த சட்டசபை தேர்தலில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களில் வென்றது. இதையடுத்து இருகட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. மெகபூபா முப்தி முதல்வராக செயல்பட்டார். அந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. மொத்தம் 18.01 சதவீத ஓட்டுகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.

ஆனால் இந்த முறை காங்கிரஸ் 33 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு கடந்த முறையை விட தற்போது சுமார் 7 சதவீத ஓட்டுகளை காங்கிரஸ் இழந்துள்ளது. அதோடு 6 சீட்டுகளை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ‛காங்கிரஸ்' கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. இதனால் கூட்டணி ஆட்சி என்றாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்காது. நிச்சயம் முதல்வர் பதவியை தேசிய மாநாட்டு கட்சிக்கு தான் கிடைக்கும். அதிலும் அந்த கட்சியின் செயல் தலைவராக உள்ள ஓமர் அப்துல்லா தான் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+