‛‛மோடி மீண்டும் பிரதமராகனும்’’.. காஷ்மீர் இளைஞரின் வைரல் வீடியோ.. அவர் கூறிய மேட்டர் தான் ஹைலைட்
ஜம்மு காஷ்மீர்: வெறும் ரூ.500க்காக கற்களை வீசிய என்னையும், லட்சக்கணக்கானவர்களையும் மீட்ட பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் பேசும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இருப்பினும் அங்கு இன்னும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதிகள் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பாஜகவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசினார். மேலும் ரூ.6,400 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வாலிபர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகிறார்.
அதாவது பள்ளி படிக்கும்போது தான் பணத்துக்காக கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், தற்போது பிரதமர் மோடியின் நடவடிக்கையால் அந்த நிலை மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வாலிபர் கூறியதாவது: நான் 10ம் வகுப்பு படிக்கும்போது கல்வீச்சில் ஈடுபட்டேன். எங்களுக்கு அப்போது வேலை இல்லை. கல் வீசினால் ரூ.500 தருவார்கள். நாங்கள் பாதுகாப்பு படையின் தாக்குதல், தோட்டாக்களுக்கு பயப்படாமல் கல்வீச்சில் ஈடுபட்டோம்.
Every Indian must listen to this Ex Stone pelter from J&K pic.twitter.com/Uw0x7ZAvts
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) March 7, 2024
எங்களை யாரும் திருத்தவில்லை. மேலும் நான் வாக்குரிமையை பெற்றிருந்தாலும் கூட அதனை பயன்படுத்தவில்லை. பிரதமராக மோடி வரும்வரை நான் ஓட்டுப்போட்டது இல்லை. ஆனால் மோடி பிரதமரான பிறகு நிலைமை மாறி உள்ளது. நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். என்னை போல் கல்வீசி வந்த ஆயிரக்கணக்கானவர்கள், லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனால் அனைவரிடமும் கூறுகிறேன். மோடி ஜியை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications