"இதுதான் முடிவு.." பாகிஸ்தானிலிருந்து சீக்ரெட் மெசேஜ் உடன் வந்த புறா.. மடக்கி பிடித்த ராணுவம்! ஷாக்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து காலில் துண்டுச் சீட்டுடன் புறா ஒன்று திடீரெனப் பறந்து வந்துள்ளது. அந்தப் புறாவைப் பிடித்துப் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்திய போது அதில் பகீர் மெசேஜ் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரில் மிகப் பெரிய குண்டுவெடிப்பு நடக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்தது முதலே இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இல்லை என்றாலும் கூட பாகிஸ்தான் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஊடுருவல்களை இந்தியா தீவிரமாகக் கவனித்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை
இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பறந்த வந்த புறாவில் இருந்த மெசேஜ் பெரும் பரபரப்பைக் கிளப்புவதாக இருக்கிறது. அதாவது அந்தப் புறாவில் ஜம்முவில் ரயில் நிலையம் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது. இந்தப் புறா இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பிடிபட்டது. இதையடுத்து ஜம்மு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்தியா பாகிஸ்தான் எல்லை எப்போதும் மிக மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும். பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க அதிகபட்ச வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். சமீப காலமாகத் தீவிரவாதிகள் மட்டுமின்றி டிரோன்களும் கூட ஊடுருவ முயல்கின்றன. இதனால் கண்காணிப்பு மிகத் தீவிரமாகவே இருந்து வருகிறது.
எல்லையில் வந்த புறா
இந்தச் சூழலில் தான் புறா ஒன்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்துள்ளது. அந்தப் புறாவின் கால்களில் ஏதோ துண்டுச் சீட்டு இருந்த நிலையில், அதைக் கவனித்த பாதுகாப்புப் படை வீரர்கள் அதைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஜம்முவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்.எஸ். புறா பகுதியில் புறாவை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.
குண்டுவெடிப்பு மிரட்டல்
அதன் காலில் கட்டப்பட்டிருந்த ஒரு துண்டுச் சீட்டில் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஜம்மு தாவி ரயில் நிலையத்தில் வரும் நாட்களில் வெடிகுண்டுத் தாக்குதல் (IED blast) நடத்தப்படும் என்ற அச்சுறுத்தும் செய்தி இருந்தது. உருது மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அது எழுதப்பட்டு இருந்தது. உருது மொழியில் "காஷ்மீர் எங்களுடையது, நேரம் வந்துவிட்டது" என்ற வாசகம் இருந்தது. ஆங்கிலத்தில் "ஜம்மு ஸ்டேஷன் ஐஇடி குண்டுவெடிப்பு.. இதுவே முடிவு" என்றும் எழுதப்பட்டிருந்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. அதன் பிறகு எல்லையில் பல சமயங்களில் தீவிரவாதிகள் நுழைய முயன்ற நிலையில், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஊடுருவல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.
பரபரப்பு
இந்தச் சூழலில் தான் மிரட்டல் சீட்டுடன் புறா பிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து ஜம்மு தாவி ரயில் நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள மற்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் இது உண்மையான மிரட்டலா இல்லை யாராவது விஷமிகள் சும்மா அனுப்பிய மிரட்டலா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications